மின்வெ(வே)ட்டு

“ ஆறு மணியாச்சா? கரண்டு போயிடும் என்கிற வசனத்தைத் தொடர்ந்து, மின்வெட்டு ஏற்படுவதுபோன்றும், பின்னர் கலைஞர் ஆட்சியில் இதுதான் நடக்கும் என்று சொல்வது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரம் கடந்து போன தேர்தலோடு அம்மையாருக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பார்த்த மாதிரி நினைவு. அப்போதாவது இந்நேரத்திற்கு தான் மின்வெட்டு என்ற வரைமுறையிருந்தது. இப்போதெல்லாம் எந்நேரத்திற்கு மின்சாரம் வரும் என ஏங்க வேண்டியிருக்கிறது.

31/10/2012 அன்று சட்டப் பேரவையில் நிகழ்த்திய உரையில் “மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான நிர்வாகத் திறமைதான் இல்லை. நீண்ட கால அடிப்படையிலாவது மின்சாரத்தைக் கொள்முதல் செய்திருக்கலாம். அதாவது CASE – 1 என்கிற அடிப்படையிலாவது ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கலாம். அதையும் முந்தைய மைனாரிட்டி திமுக அரசு செய்யவில்லை. மாறாக, குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்தார்கள்.அதாவது, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது. இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மை நிலை என்னவென்றால், இரு கட்சிகளுமே தத்தம் ஆட்சிகளில் அயல் நாட்டு நிறுவனங்களுக்கு தமிழ் நாட்டில் நுழைய போட்டி போட்டுக் கொண்டு அனுமதியை வாரி வழங்கின. மேலும், இந்நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின்போதே மின்சாரமும், தண்ணீரும் தங்குதடையின்றி வழங்குவதாய்க் கையொப்பமிட்டிருக்கின்றன. இன்றளவும் தமிழகத்திற்கு ஆட்சிக்கு வரும் எந்த அரசாக இருந்தாலும் அயல் நாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாகவே இருந்து வருகின்றன.

அண்மையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றத்திற்கும், திருச்செந்தூருக்கும் சொந்த வேலையாகச் சென்று வந்தேன். நிலைமை படு மோசமாக இருக்கிறது. பகலில் மின்சாரம் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாததாகவும், இரவில் நான்கைந்து மணிநேரங்கள் மட்டுமே வந்து போவதாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு இதுதான் நிலை என்பது கொடுமையானது. இந்தப் பகுதிகளிலிருக்கும் கைக்குழந்தைகள் இப்போதே மின்வெட்டிற்குப் பழகிவிட்டன என்பது நிதர்சனமான உண்மை.

* மொத்தமாக தமிழகத்திற்கு உபயோகப்படுத்தப்படும் மின்சாரத்தில் 25 விழுக்காடு சென்னைக்கு மட்டும் செலவாகிறது. ஆனால், சென்னையில் மட்டும்தான் மின்வெட்டு ஏற்படும் நேரம் மிகக்குறைவு.

* விவசாயத்திற்கும், ஆடை நெய்வதற்கும் மற்றும் சில அத்தியாவசியமான தேவைகளுக்கும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கக் கற்றுக்கொண்டோம். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி என தொடர்ந்து கொண்டிருந்த நாம், மின்வெட்டால் உற்பத்தியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

* அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்படாத மின்சாரம் அயல் நாட்டு நிறுவனங்களுக்காய் ஒதுக்கப்படுவது எள்ளளவும் ஏற்றுக் கொள்ள முடியாததல்லவோ.

* இலவச மின்சாதனங்கள் வழங்கி, மின்சாரத்தின் பயன்பாட்டினை அதிகரித்துவிட்டு, இப்போது மின்சாரம் போதவில்லை என அங்கலாய்ப்பது முறையா? தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் படிப்பறிவற்ற பாமரனுக்குக் கூட இதை யோசிக்கத் தெரியுமே. என்றால், மடிக்கணிணி வேண்டுமென்று ஒரு நேரம் கொடிபிடித்த பட்டதாரிகள் செய்ததும் கூட முறையல்லவே.

* இதற்கிடையே, காற்றாலை உற்பத்தியை தற்காலிகமாய் நிறுத்தி வைத்து, கூடங்குளம் விவகாரத்திற்கும் முடிவு காணாமல், மின்வெட்டைத் தீர்க்க என்னதான் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார்களோ?

* எரிகிற வீட்டில் பிடுங்கினது மிச்சம் என்பது போல, நமக்கிருக்கும் மின்பற்றாக்குறையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளும் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டுதானிருக்கின்றன.

எந்த அரசு மின்வெட்டு ஏற்படக் காரணம் என்பதெல்லாம் எமக்குத் தேவையில்லை. முந்தைய அரசைக் குறை கூறுவதாயிருந்தால் அதை நாமே செய்வோம். முந்தைய அரசின் குறைகளைப் பட்டியலிடுவதற்காய் ஒன்றும் நாம் அம்மையாருக்கு ஆட்சிப் பொறுப்பினை அளிக்கவில்லை. இதை எப்போதுதான் அரசு புரிந்து கொண்டு, மின்வெ(வே)ட்டைத் தீர்க்குமோ?

Advertisements

21 thoughts on “மின்வெ(வே)ட்டு

  • நடுவே காட்டியுள்ள தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் பேட்டியளிக்கும் படமும் நல்லாயிருக்கு.

   >>>>>>>

   • கடைசியில் காட்டியுள்ள பல்புக்குள் பாமர மனிதன் படம் மிக நல்ல தேர்வு.
    அவன் மின்சாரம் இல்லாமலேயே நன்கு எரிகிறான் பார்த்தீங்களா, நுண்மதி.

    ஆஹா!! அது ஜோர் ஜோர்.

    >>>>>>>>

     • அதற்குள் நான் பார்த்த மயில்கள் இரண்டையும் துரத்திவிட்டுவிட்டு,
      இரு காதலர்கள் மெய்மறந்து இருப்பதைக் காட்டி அசத்திவிட்டீர்களே,
      கெளரி லக்ஷ்மி. ;)))))

      >>>>>>

      • ஏன் ஏராளமான குட்டிக்குட்டி பின்னூட்டங்கள் என யோசிக்கிறீர்களா, ராணி.

       நான் மிகப்பெரிய பின்னூட்டம் எழுதி முடித்து அனுப்பும் முன்பு, திடீரென்று மின்தடை ஏற்பட்டு, அதை என்னால் அனுப்ப முடியாமல் போய்விடுகிறது.

       இதுவே நான் தினமும் அனுபவித்து வரும், பழகிப்போன கஷ்டமாகி விட்டது.

       என் கஷ்டம் என்னோடு போகட்டும்.
       உங்களையாவது மகிழ்விப்போன் என்ற நல்லெண்ணத்தில் தானம்மா….

       >>>>>>>

       • மீண்டும் அந்த முதல்படத்தில் இருந்த காதலர்களைக்காணோம், இப்போது.

        அதற்குள் அவர்களை போலீஸோ அல்லது பெற்றோர்களோ தள்ளிக்கொண்டு போய் இருப்பார்களோ!

        வண்ண வண்ணக்கிளிகள் வந்து விட்டனவே! கொள்ளை அழகு.
        கிளிகொஞ்சும் பதிவாக மாற்றி விட்டனவே!! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!! 😉

        அன்பின் நுண்மதி,

        உங்களைப்பார்த்து
        நீ……ண்…..ட நாட்கள் ஆகிவிட்டன. செளக்யமாக இருக்கின்றீர்களா?

        பதிவு அருமை. பகிர்வு அருமை.
        சந்தோஷம். பாராட்டுக்கள்.
        வாழ்த்துகள்.
        நன்றிகள்.

        அன்புடன்
        VGK [கோபு]

        • தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியாலும், கடவுளின் கருணையினாலும் மகிழ்வுடனும், நலமாகவும் இருக்கிறேன் சார்.நானும் கூட தங்களைப் பார்த்து மிக நீண்ட நாட்கள் ஆகி விட்டன. முன்பு போல இப்போதெல்லாம் அடிக்கடி வலைப்பக்கம் வர முடிவதில்லை சார்.

       • மின்தடையால், பின்னூட்டங்கள் எழுதுவது தடைபட்டாலும் எம்போன்ற இளையோரை மகிழ்விக்க வேண்டும் என்ற உந்துதல் உண்மையிலேயே அளப்பரியது சார். ஏராளமான குட்டிக்குட்டி பின்னூட்டங்கள் ஏன் என யோசித்தாலும், அவற்றினால் நான் மகிழ்வடைந்தது உண்மைதான். வெகு விரைவில், மின்வெட்டுப் பிரச்சினை தீர இறைவனை வேண்டுவதன்றி நமக்கு வேறு வழியொன்றுமில்லையே.

    • அடடே… நான்காவது முறையான தங்கள் வருகை வியப்பளிக்கிறது சார். இந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே எனக்கும் பிடித்துப்போய் விட்டது.

 1. அன்பின் நுண்மதி – ஆதங்கம் புரிகிறது – மின் வெட்டு பழகிப் போய் விட்டது – அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மின் வெட்டு மாறி மின் மிகை மானிலமாக மாறும் என அரசு அறிவித்து உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் – நல்வாழ்த்துகள் நுண்மதி – நட்புடன் சீனா

  • நன்றி ஐயா, மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை இப்படி மாற்றிவிட்டார்களே என்பதுதான் வருத்தமளிக்கிறது. ஓராண்டுக்குள் மின் பற்றாக்குறையை சீர் செய்வதாய் வாக்குறுதி அளித்திருந்த முதல்வர் அவர்கள் ஒன்றரை ஆண்டுகளாகியும், இன்னும் ஓராண்டு காலத்தில் மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறும் என சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனினும் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழி நமக்கில்லை.

  • நன்றி தோழி. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னியுங்கள்.

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s