விதைகளின் பயணம்

விதைக்கப்படுகிற

எல்லா விதைகளும்

விருட்சங்களாவதில்லை…

 

சில நேரங்களில்

சித்துக்கள் புரியவும்

பல நேரங்களில்

வித்தைகள் காட்டவும்

பழக்கப்படுகிறோம்…

 

தவறும் தருணங்களில்

விலைபேசப்பட்டுக்

கொத்தடிமைகளாய்

விற்கப்படுகிறோம்…

 

 

பிச்சை புகினும்

எங்களுக்குக்

கற்பிக்கப்படுபவை

வறுமைப் பாடங்களே…

 

எங்கள் பெற்றோர்

உழைத்திருந்தால் ஒருவேளை

எங்களுக்கு வாழ்க்கைப் பாடங்கள்

கற்பிக்கப்பட்டிருக்கலாம்…

 

உண்மைதான் – சிரமமின்றி

விதைக்கப்படுகிற

எல்லா விதைகளும்

விருட்சங்களாவதில்லை

எங்களைப்போல…

Advertisements

16 thoughts on “விதைகளின் பயணம்

 1. அன்புள்ள நுண்மதி,

  //விதைக்கப்படுகிற எல்லா விதைகளும்
  விருட்சங்களாவதில்லை…//

  உண்மை தான்.

  காதல் கவிதைகளிலிருந்து ஒரே தாவாகத்தாவி விரக்தியுடன் ஒரு கவிதை எழுதி அசத்தியுள்ளீர்களே!

  அதுவும் அருமையாகவே உள்ளது. பாராட்டுக்கள்.

  இரட்டைக்காதல் கிளிகள் அதுவும் அழகிய மஞ்சள் நிறத்தில்…… சூப்பர்.

  என் பதிவுகள் பக்கமே வருவதில்லை. பாராமுகமாக இருக்கிறீர்கள். என்ன கோபமோ?

  Latest June & July releases [Thanks to Awards]

  http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html

  http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html

  http://gopu1949.blogspot.in/2012_06_01_archive.html

  http://gopu1949.blogspot.in/2012/06/blog-post.html

  அன்புடன் vgk

  • நன்றி சார். பின்னூட்டத்தை பின்னூட்டமாக எழுதாமல், மிக நீ………ளமாக எழுதிவிட்டதால், மின்னஞ்சலாகவே அனுப்பிவிட்டேன். தெருவோரக் குழந்தைகளைப் பார்க்கும் பொழுதுகளில் விரக்தியே மேலிடுகிறது. என்ன செய்வது?

 2. அன்பின் நுண்மதி – அருமையான சிந்தனை – உரை நன்று. சிரமமின்றி விதைக்கப்படுகின்ற விதைகள் விருட்சமாவதில்லை. உண்மை தான். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. குழந்தைகள் உலகின் மறுபுறம் கூறினீர்கள். எதைக் கூற, எதை விட. வித்தியாசமான உலகு. புரிகிறது. பயணம் தொடர நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 4. உங்கள் வலை பூவை வலைசரத்தில் அறிமுகம் செய்திருகிறேன் வந்து பார்த்து கருத்திட்டு செல்லுங்கள் …..புதிய உறவுகளை நட்பாக்குங்கள்

  • வலைப்பூவினை சென்று தரிசித்து வந்தேன் சார். மிக்க நன்றி சார், விருதுகளுக்கு மட்டுமல்ல, பகிர்ந்து கொள்வதன் மகத்துவத்தை என் போன்ற சிறியவர்களுக்கு செயல் முறையாக சொல்லித்தருவதற்கும் தான்.

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s