ஒரு காதல் உரையாடல் – 3

காதலி : இயற்கைப் பேரழிவின் தாக்குதல் எப்படிப்பட்டதாய் இருக்கும்…???

காதலன் : உன் இயற்கைப் பேரழகின் தாக்குதலின் முன் அது கூட மெல்லியதாகவே இருக்கும்…

காதலி : பார்த்தும் சலியாதது எது…???

காதலன் : உன் வெட்கப் புன்னகையினால் நான் ஒருபோதும் சலித்துக்கொண்டதில்லை…

காதலி : உங்களுக்குப் பிடித்த மலர் எது..??

காதலன் : இப்போதெல்லாம் உன் முக மலரைத்தவிர பிற மலர் எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை…

காதலி : தொழில் நுட்பம் பற்றி உங்களுக்குத் தெரியுமா…???

காதலன் : உன் எழில் நுட்பம் கண்ட எனக்கெதற்குத் தொழில் நுட்பம்….???

காதலி : இரவு ஏன் அமைதியாக இருக்கிறது…???

காதலன் : உன் சிணுங்கல்களைக் கேட்டு இரசிக்கும் பொருட்டே…

காதலி : நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் இரகசியம் ஏதேனும் உண்டா…???

காதலன் : உன் கூந்தலினின்று விழும் ஒரு துளி நீர் எத்தனை ஆண்டு காலம் தவம் செய்திருக்கும் என்று அறிந்துகொள்ள ஆர்வம் உண்டெனக்கு…

காதலி : பரதத்தில் தங்களுக்கு ஆர்வமுண்டா…???

காதலன் : உன் ஒவ்வொரு அசைவினையும் கவனிக்க ஆர்வமற்றுவிடுமா என்ன…???

காதலி : கற்கள் சிலையாவது எப்படி?

காதலன் : உன் கால்கள் அவைகளை முத்தமிடும்போது
காதலி : உங்களுக்கு அணிகலன்கள் பிடிக்குமா…?
காதலன் : பெண்மைக்கு அணிகலனான உன்னைப் பிடிக்காமல் போய்விடுமா என்ன?
காதலி : நேரமாகி விட்டது. என் வீட்டார் என்னைத் தேடக்கூடும். மறுமுறை சந்திப்போமா?
காதலன் : நொடிக்கொருமுறை தேடும் என் விழித் தேடலில் நீ சீக்கிரமே சிக்கிவிடக் கூடும். விழித் தேடல் இமைத் தேடலாக மாறும் முன் வந்திடு என்னிடம்…
Advertisements

4 thoughts on “ஒரு காதல் உரையாடல் – 3

  1. காதலனின் உணர்வுகளை, அழகாகவும், அருமையாகவும், மயில்தோகையால் வருடியது போல மென்மையாகவும், மனதுக்கு இதமாகவும் எழுதியுள்ளீர்கள்.

    காட்டப்பட்டுள்ள படமும் மிக அருமையான தேர்வு.

    பாராட்டுக்களும் வாழ்த்துகளும், கெளரி.

    அன்புடன் vgk

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s