கணநேர ஏமாற்றம்

புத்தக மூட்டையை

சுமந்து நிற்கும்

பள்ளிக்குழந்தைகள்…

அலுவலகம் செல்லவேண்டி

சலிப்பாய் நிற்கும்

சில மனிதர்கள்…

நாலைந்து பைகளை

அடுக்கிக்கொண்டு விலா ஒடிய

நிற்கும் கிழவி…

கல்லூரி செல்லவேண்டி

கூட்டமாய் நிற்கும்

இளம்பெண்கள்…

ஒருவழியாய் எல்லோரையும்

கணநேரத்தில்

ஏமாற்றி விடுகிறது…

நடத்துனரின் கழுத்தில்

நர்த்தனமாடும்

விசில்…

4 thoughts on “கணநேர ஏமாற்றம்

  1. அன்புள்ள நுண்மதி,

    கவிதை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    =========================================

    அவர்களுக்காவது கணநேர ஏமாற்றம் தான்.

    அழகாகப் பின்னூட்டமிட்டுக் கருத்துக்களை அள்ளித் தந்து வந்துகொண்டிருந்த என் அன்புக்குரிய வாடிக்கையாளரான தங்களை என் பதிவுகளில் காணாமல் நான் பல மாதங்களாக ஏமாறி வருகிறேன் தெரியுமா?

    நாளை 29.04.2012 காலை 11 மணிக்கு நான் வெளியிடவுள்ள “ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” தொடர் நாடகத்தின் மிக முக்கியமான பகுதியான,
    பகுதி-17 க்கு கட்டாயம் வருகை தாருங்கள்.

    அதன் மற்ற பகுதிகளை பிறகு ஒழிந்தபோது படித்துக்கொள்ளுங்கள்.

    அன்புடன் vgk

    • தங்களின் அன்புக் கட்டளைக்கேற்ப அந்தப் பதிவினை படித்து முடித்து, பின்னூட்டமும் கொடுத்துவிட்டேன் ஐயா. பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

  2. அன்பின் நுண்மதி – நடத்துனரின் விசிலுக்கு அசுர பலம். சிந்தனை நன்று. சீவிச் சிங்காரித்து நிற்கும் ….. தேவையா இவ்வரிகள் ….. … – கவிதை நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s