பன்முகத் திறமையாளர் விருது..

பன்முகத் திறமையாளர் விருது எனப்படும் இந்த “Versatile Blogger Award” திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களால், பிப்ரவரி 5,2012 அன்றே வழங்கப்பட்டது. அலுவலகப் பணிகள் அதிகமாக இருந்ததால், இன்றுதான் எழுத முடிந்தது.

திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களைப் பற்றி சில வரிகள்…

* நகைச்சுவை சிறுகதைகள் எழுதுவதில் தேர்ந்தவர். இவரின் சிறுகதைகளில் பலவற்றை ஒரே இரவில் தூங்காமல் படித்திருக்கிறேன்.

* தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக இடம்பெற்றவர்.

* சில நேரங்களில் கவிதையும் எழுதுவார்.

* மேலும் சில நேரங்களில், குழந்தைகளின் அறிவை வளர்க்கும் விதமாய் கணக்குகளையும் சொல்லுவார்.

* தற்போது அற்புதமான பல ஆன்மீகப் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறார்.

* இவரைப் பற்றிய சுயவிபரக் குறிப்பில் ” சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று குறிப்பிட்டிருப்பார். சாதனைகள் புரிந்த ஒருவர் இவ்வாறாக தன்னடக்கத்துடன் இருப்பது இக்காலத்தில் அரிதே.

* இவரது வலைத்தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.

இவருக்குப் பிடித்த விடயங்கள்…

* எழுதுதல்

* வாசித்தல்

*  படம் வரைதல்

*  ஒரு சில கைவேலைகள் செய்தல்

*  திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் எப்போதாவது தொலைகாட்சியில் ரசிப்பது

*  மிகவும் விரும்பிப்படிக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுதல்

*  மிகவும் ருசியான ஒருசில சிற்றுண்டிகளை விரும்பிச் சாப்பிடுதல்

 
எனக்கு இந்த விருதினை அளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள் பலவற்றை உரித்தாக்குகிறேன்.
இந்த விருதினைப் பெற்றுக் கொள்கிறவர்கள், தனக்குப் பிடித்த ஏழு விடயங்களைச் சுருக்கமாகக் கூறிவிட்டு, பின்னர் தகுதியான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்க வேண்டுமாம். அவ்வாறு செய்தால்தான் இந்த விருதினை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகுமாம்.
எனக்குப் பிடித்தமான ஏழு விடயங்கள்…
* வாசிப்பது
* எழுதுவது
* பெற்றோருடனும், நண்பர்களுடனும் நேரம் செலவிடுவது
* கோயில்களுக்குச் செல்வது
* தொலைதூரப் பிரயாணம் செய்வது
* கைவேலைகள் செய்வது
* பாடல்கள் கேட்பது.
நான் இந்த விருதினை வழங்க விரும்பும் ஐந்து பதிவர்களின் பட்டியல் இதோ…
திரு.அனந்து அவர்கள்
திரு.விமலன் அவர்கள்
திரு.சென்னை பித்தன் அவர்கள்
திரு.சேவியர் அவர்கள்
திரு.கண்ணன்
தாங்களும் மேற்படி விருதினை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தங்களின் ஏழு விருப்பங்கள் பற்றி தங்கள் பதிவினில் கூறிவிட்டு, இதே முறையில், தங்களுக்கு மிகவும் பிடித்தமான தகுதி வாய்ந்த மற்ற ஐந்து பதிவர்களுக்கு, இந்த விருதினை அளித்து மகிழுங்கள்.
இந்தத் தொடர் சங்கிலி அறுந்து போகாமல் அவர்களையும் இதுபோலவே செய்யச் சொல்லுங்கள்.
Advertisements

7 thoughts on “பன்முகத் திறமையாளர் விருது..

 1. இரண்டாவது முறையாகப் பன்முகத் திறமையாளர் விருது வழங்கி என்னைச் சிறப்படையச் செய்தமைக்கு மிக்க நன்றி.இது மேலும் என் எழுத்தை மெருகேற்றிக்கொள்ள உதவும்.நன்றி.

 2. என் அன்புக்குரிய நுண்மதி,

  விருது பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  விருதினை ஏற்றுக்கொண்டதற்கு என் நன்றிகள்.

  விருதினை மேலும் ஐவருக்கு தாங்கள் வழங்கியுள்ளதும்,
  அதை பதிவிட்டு கூறியுள்ள விதமும் அழகோ அழகு.

  விருது பெற்ற அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

  தங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  பிரியமுள்ள vgk

  • நன்றி vgk சார். தாங்கள் எனக்குத் தெரிவித்த உடனே என்னால் இப்பதிவினை எழுத முடியவில்லை. அதில் எனக்கு வருத்தமே. எனினும், தாங்கள் பின்னூட்டமிட்டு சிறப்பித்தமை எனக்கு மகிழ்வளிக்கிறது.

 3. விருது பெரும் அளவு எனக்கு தகுதி இருக்கிறதா என தெரியவில்லை ! இதை உங்கள் அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன் … விருது அளித்தமைக்கும் , என் கவிதைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் வாயிலாக உற்சாகம் அளித்து வருபமைக்கும் மிக்க நன்றி … அன்புடன் அனந்து …

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s