வித்தியாசம்…

நடைப் பயணத்தின் போது
உடன் நடைபயின்று
மகிழ்விக்கும்…

வாகனப் பயணத்தின் போது
சேற்றை முகத்தில்
வாரியடிக்கும்…

கூரைகள் வழியாய்
வழிந்தோடி
மனதைக் கொள்ளையிடும்…

காரைக் கட்டிடங்களினூடே
இயந்திர மனிதன் போல்
பயணிக்கும்…

வரப்புகளினூடே
சேற்றுக் கால்களுடன்
நர்த்தனமிடும்…

பாதாள சாக்கடையில்
கலந்து நின்று
அருவருப்பூட்டும்…

மரங்களுக்குத்
தாய்ப்பாலாகி
மண்ணைக் குளிரூட்டும்…

செல்வதற்கு வழியின்றி
தேங்கி நின்று
நோய் கிளப்பும்…


குழந்தைகளின் மேல்
துள்ளிப் பாய்ந்து
விளையாடும்…

காய்ச்சல் வரும்
என்று  காரணம் சொல்லி
குடைகளில் பட்டுத் தெரிக்கும்….

இப்படியாய்
நிறையவே இருக்கிறது
வித்தியாசம்….

கிராமத்து மழைக்கும்
நகரத்து மழைக்கும் கூட….

6 thoughts on “வித்தியாசம்…

  1. ’வித்யாசம்’ என்ற தலைப்பில் வித்யாசமாக சிந்தித்து எழுதியுள்ள இந்தக் கவிதைமழையில் நானும் நனைந்து மகிழ்ந்தேன்.

    மிகவும் பிடித்த வரிகள்::

    //மரங்களுக்குத்
    தாய்ப்பாலாகி
    மண்ணைக் குளிரூட்டும்…//

    காட்டியுள்ள படங்கள் மிகவும் பொருத்தமாகவே உள்ளன.

    கடைசி இரண்டு வரிகளான

    //கிராமத்து மழைக்கும்
    நகரத்து மழைக்கும் கூட….//

    முத்திரை பதித்த முடிவாக அமைந்துள்ளன.

    இதுவும் காதல் கவிதையே, ஆனாலும் மழைமேல் காதல் கொண்ட கவிதை, அதனால் இதில் தலைப்பில் காட்டியுள்ள ‘வித்யாசம்’ உணரப்படுகிறது. ;))))

    பாராட்டுகள் நுண்மதி;
    வாழ்த்துக்கள்;
    பகிர்வுக்கு நன்றிகள்!

    பிரியமுள்ள
    vgk

    • நகரத்து மழையைப் போல் குடையோடல்லாமல், கிராமத்து மழையில் நனைந்ததற்கு நன்றி சார்.

      \\இதுவும் காதல் கவிதையே, ஆனாலும் மழைமேல் காதல் கொண்ட கவிதை, அதனால் இதில் தலைப்பில் காட்டியுள்ள ‘வித்யாசம்’ உணரப்படுகிறது.😉 )))\\

      ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்.🙂

  2. ”..இப்படியாய்
    நிறையவே இருக்கிறது
    வித்தியாசம்….

    கிராமத்து மழைக்கும்
    நகரத்து மழைக்கும் கூட…”’

    உண்மை எத்தனை வித்தியாசங்கள் நிறைய எழுதலாம் நல்வாழ்த்து சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s