ஒரு காதல் உரையாடல்-2

 

 

காதலி : மௌனம் என்பது என்ன…?

காதலன் : என் இதழ் பிரிக்காமல் உன் இதயத்திற்கு சொல்லப்படும் கவிதை…!

காதலி : நிலவினை உங்களுக்குப் பிடிக்குமா…?

காதலன் : உன் நிழலை எனக்குப் பிடிக்காமல் போய்விடுமா என்ன…?

காதலி : பாறைகள் ஏன் உறுதியாயிருக்கின்றன…?

காதலன் : உன்னைப் பார்ப்பதற்கு முன் நானும் அப்படித்தானே…!

காதலி : அழகிற் சிறந்தவர் இவ்வுலகில் யார்…?

காதலன் : என் விழிகளில் பார்…  அவைகள் எப்பொழுதும் பொய்யுரைத்ததில்லை…!

காதலி : மலர்களில் தேன் எப்படி வந்தது…?

காதலன் : அதிகாலையிலேயே எவருக்கும் தெரியாமல் நீ அவைகளை முத்தமிட்டிருப்பாய்…!

காதலி : உங்களுக்குப் பிடித்த இசை எது…?

காதலன் : உன் வளையோசையைக் காட்டிலும் சிறந்த இசை இவ்வுலகில் உண்டா…?

காதலி : உங்களுக்கு கவிதைகள் பிடிக்குமா…?

காதலன் : கவிதைகளைக் காட்டிலும் கவிஞர்களை உருவாக்கும் உன்னைப் பிடிக்கும்…!

காதலி : சிறந்த கல்வி எது…?

காதலன் : உன்னைப் படிப்பது… பல முறை முயன்றும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்…!

காதலி : என்னிடம் உங்களைக் கவர்ந்தது எது…?

காதலன் : உன்னிரு விழிகள்… காதலுரைத்த நாள் முதல் நான் அவைகளைத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறேன்…!

காதலி : காதல் எப்படிப்பட்டது…?

காதலன் : உன்னைச் சந்திக்க நேர்கிற மழைக்காலங்களில் என் தலை துடைக்கும் உன் ஈர முந்தானை…  இப்படிப்பட்டதுதான் காதல்…!

காதலி :  நான் விடைபெறும் நேரமிது… சீக்கிரம் சொல்லுங்கள்… காதலில் சுகம் எது…?

காதலன் : காதலின் சுகம் காத்திருப்பு…  என் நினைவுகளை உறைய வைக்கும் உன் கடைக்கண் பார்வைக்காய் காத்திருப்பேன் அன்பே…!

6 thoughts on “ஒரு காதல் உரையாடல்-2

  1. ஆஹா! ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் வெகு அருமையாய் நான் என் மனதில் நினைத்தைப் போலவே சமத்தாகச் சொல்லியிருக்கிறானே!

    யார் அந்த அப்பாவிப்பையனோ! ;)))))

    காதல் பற்றி எது எழுதினாலும் மிக அழகாகவே எழுதுகிறீர்கள்!

    ‘L’ போர்டு காதலர்களுக்கு வகுப்பு எடுத்து பாடம் சொல்லித்தந்தால்
    நீங்கள் வெகு விரைவில் கோடீஸ்வரி ஆகிவிட வாய்ப்புகள் உண்டே! ;))))

    • \\ஆஹா! ஒவ்வொரு கேள்விக்கும் பதில்கள் வெகு அருமையாய் நான் என் மனதில் நினைத்தைப் போலவே சமத்தாகச் சொல்லியிருக்கிறானே!\\

      அப்படின்னா உங்க கருத்தும் என்னோட கருத்தும் ஒரே மாதிரிதான் இருக்கு…

      \\யார் அந்த அப்பாவிப்பையனோ! ))))\\

      நானேதான் சார்… பையனும் நான்தான், பொண்ணும் நான்தான்…

      \\காதல் பற்றி எது எழுதினாலும் மிக அழகாகவே எழுதுகிறீர்கள்!

      ‘L’ போர்டு காதலர்களுக்கு வகுப்பு எடுத்து பாடம் சொல்லித்தந்தால்
      நீங்கள் வெகு விரைவில் கோடீஸ்வரி ஆகிவிட வாய்ப்புகள் உண்டே! )))

      நன்றி சார்… நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்…😀

  2. எல்லாமே (பைத்தியமாகப்) பிடித்திருந்தாலும், மிகவும் கவர்ந்தது:

    //காதலி : மலர்களில் தேன் எப்படி வந்தது…?

    காதலன் : அதிகாலையிலேயே எவருக்கும் தெரியாமல் நீ அவைகளை முத்தமிட்டிருப்பாய்…!//

    vgk

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s