காதலனின் இலக்கணம்

 

 

பெண்ணே…!

 

“நிலைமொழியாய்” நானிருந்த பொழுதுகளில்

“வருமொழியாகிச்” சேர்ந்து

“புணர்ச்சி விதி”யாக்கியது நீ…

 

என் வாழ்வில் “இல்லை” என்பதை

“இலை” என்றாக்கிய

“இடைக்குறை” நீ…

 

என் “பகுதி” வாழ்க்கை

“சந்தி”யில் போகாதிருக்க

“சாரியை”யாக வந்தவள் நீ…

 

என் வாழ்வில்

“பகுபத உறுப்பாக” மட்டும்

இருந்துவிடாதே…

 

என் “விகுதி” வரை

நீ என்னோடிருக்க

“இடைநிலை”யாக வேண்டுமா நான்…?

 

இதோ…

 

சென்றுகொண்டிருக்கிறேன்…!

 

இல்லையில்லை…

 

செத்துக்கொண்டிருக்கிறேன்…!

 

உன் இதயக் குறிப்பை

“இலக்கணக் குறிப்பாகத்”

தந்து விடு…

 

அதில் என் உயிரைப்

புதைத்து என்னை

இன்னும் கொஞ்சம் வாழ விடு…

 

புதைகுழியில் சிக்கியவனுக்கு

மரணம்தான்

மிஞ்சும்…

 

கண்மணியே…

 

உன் இதயக் குழியில்

சிக்கிவிட்டால் மரணம் கூட

கெஞ்சும்…! 

 

 

Advertisements

14 thoughts on “காதலனின் இலக்கணம்

 1. இலக்கணவிதிகள் மாணவர்களுக்குப் பாடமாய் வைத்தால் எளிமையாய் இனிமையாய் சந்தேகமற சந்தோஷமாய் படிப்பார்கள்..

  தாம்பத்யப் பாடம் அருமை..

 2. ’காதலனின் இலக்கணம்’ பற்றி
  இலக்கண சுத்தமாகவே எழுதியுள்ளீர்களே!

  அது எப்படி?

  OK OK எப்படியோ இருந்துவிட்டுப்போகட்டும்.
  என்றாவது ஒரு நாள் நீங்களே சொல்லத்தானே
  போகிறீர்கள்! ;)))))

  அதுவரை நானும் அவசரப்பட மாட்டேன்.

  அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
  வாழ்த்துகள். அன்புடன் vgk

  [உங்கள் வலைப்பூ BLOGGER தொடர்பு இல்லாமல்
  WORDPRESS என்று தனித்தன்மை வாய்ந்ததாக
  இருப்பதால், இன்று என்னால் இந்தப் பின்னூட்டம்
  கொடுக்க முடிகிறது.
  அதுவரை நமக்குள் ஏதோ ஒரு அதிர்ஷ்டமே,
  நுண்மதி]

  • \\’காதலனின் இலக்கணம்’ பற்றி
   இலக்கண சுத்தமாகவே எழுதியுள்ளீர்களே!

   அது எப்படி? \\

   எல்லாம் ஒரு கற்பனைதான் சார்…

   \\OK OK எப்படியோ இருந்துவிட்டுப்போகட்டும்.
   என்றாவது ஒரு நாள் நீங்களே சொல்லத்தானே
   போகிறீர்கள்! ))))

   அதுவரை நானும் அவசரப்பட மாட்டேன்.\\

   நிஜமாகவே கற்பனைதான்… வேறொன்றுமில்லை…

   \\அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
   வாழ்த்துகள். அன்புடன் vgk

   [உங்கள் வலைப்பூ BLOGGER தொடர்பு இல்லாமல்
   WORDPRESS என்று தனித்தன்மை வாய்ந்ததாக
   இருப்பதால், இன்று என்னால் இந்தப் பின்னூட்டம்
   கொடுக்க முடிகிறது.
   அதுவரை நமக்குள் ஏதோ ஒரு அதிர்ஷ்டமே,
   நுண்மதி]\\

   பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

   நல்லவேளையாக WORDPRESS கோளாறு எதுவும் செய்யவில்லை.

   நிச்சயமாக இது அதிர்ஷ்டமே சார்…

  • எனக்கும் பிடித்த கவிதை இது… பள்ளி இறுதி வகுப்புகளில் இலக்கணக் குறிப்பை இப்படித்தான் நினைவில் நிறுத்தி எழுதியிருக்கிறேன்… நன்றி நண்பரே…

 3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…

  வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_28.html) சென்று பார்க்கவும்… நன்றி…

 4. அன்புள்ள கெளரி லக்ஷ்மி, நலமா?
  இன்று 28.08.2012 அன்று Dr. / Ms. கோவை மு.சரளா அவர்கள் மூலம் வலைச்சரத்தினில் இந்தப்பதிவு பாராட்டிப் பேசப்பட்டுள்ளது. என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துகளும். VGK

 5. இன்று தான் தங்கள் தளம் வந்தேன் சொந்தமே!வரைச்சரம் மூலம் தங்களை அறியும் வாய்ப்புகிடைத்தது.மிக்க மகிழ்ச்சி .சந்திப்போம் சொந்தமே!

  • நன்றி அதிசயா அவர்களே. சொந்தம் என்று கூறி மகிழ்சிக்குள்ளாக்கி விட்டீர்கள். தங்களின் அறிமுகம் எனக்குக் கிடைக்கச் செய்த தோழி சரளா அவர்களுக்கு நன்றிகள் கூற கடமைப்பட்டிருக்கிறேன். தொடரட்டும் நம் உறவுகள்…

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s