இந்த வருடத்தில் நான்…

இந்த வருடத்தில் நான் என்கிற தொடர்பதிவினைத் தொடர திரு.அனந்து அவர்களிடமிருந்து வந்த அழைப்பினை ஏற்று, இந்தப் பதிவினை எழுத நாம் தொடங்கியிருக்கிறோம்.

படித்ததில் பிடித்தது : அடுத்த அக்னிப்பிரவேசம் – பா.விஜய்

வாங்கிய பொருள் : Whirlpool fridge.  ( நகை வாங்கித் தருகிறேன் என்று அழைத்துச் சென்ற பெற்றோரிடம் அடம் பிடித்து, வசையோடு சேர்த்து வாங்கியது.)

சென்ற இடம் :  திருக்கழுக்குன்றம். இங்கிருக்கும் உறவினர் வீட்டுக்கு எத்தனையோ முறை சென்றிருந்தாலும், ” அய்யோ, இதப்பாக்கலயே” என நான் ஏங்கியது இங்கிருக்கும் சிவன் கோவிலைப் பார்த்து. அங்கிருக்கும் சங்கு தீர்த்தக்குளத்தில் சங்கு பிறப்பது (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) அவ்வளவு பிரபலம். சங்கிற்கு அடுத்ததான ஆச்சர்யம் சிற்ப வேலைப்பாடுகள். ஒரே கல்லில் ஆன தூண்களைப் பார்த்தால், எனக்கு மட்டுமல்ல எவருக்கும் வியப்பு வரும்.

பிடித்த பாடல் : என்னமோ ஏதோ… (கோ)

எம்மா எம்மா… (ஏழாம் அறிவு)

உன் பேரே தெரியாது… ( எங்கேயும் எப்போதும்)

மிகப்பெரிய சந்தோஷம் :  தேர்விற்காய் விழித்திருந்த இரவுகளையும், உடல் நலமில்லாமல் எழுதி முடித்த தேர்வுகளையும் ஒருவழியாய்  மறக்க வைத்த தருணம் ஜுலை 24.  இளங்கலைப் பட்டம் வாங்கிய அந்நாளில், பெற்றோரின் முகத்தில் கண்ட பூரிப்பு நான் இதுவரை கண்டிராத மிகப்பெரிய சந்தோஷம்.

புதிய நண்பர்கள் : மூன்றாம் கோணம், திரு.அனந்து, திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் போன்ற பதிவுலக நண்பர்களும், புதிதாய் சேர்ந்திருக்கும் படிப்பில் கூடப் படிக்கும் நண்பர்களும்…

வருத்தம் : பள்ளிப்பருவத் தோழன் ஒருவன்,  பேருந்தில் படியில் பயணம் செய்தபோது தவறியது.

ஆச்சர்யம் : இந்தப் பதிவினை இன்றே எழுத முடிந்தது. திரு. அனந்து அவர்கள் என்னை 22 டிசம்பர் அன்றே தொடர்பதிவிட அழைத்திருந்தார். ஜனவரி 4 அன்று எனக்குத் தேர்வின் காரணமாய் என்னால் இப்போதைக்கு எழுத முடியாது என்று அவரிடம் கூறியிருந்தேன். இன்று மதியம், தேர்வு பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாய் வந்தவுடனேயே எனக்கு ஆச்சர்யம். ( ஒருவேளை சனவரிக்குப் பிறகு எழுதியிருந்தால், தலைப்பு மாற்றப்பட வேண்டுமே!). 

 

 

இந்த 2012 ஆம் ஆண்டு, பல்வேறு நலங்களையும், வளங்களையும் தங்கள் வாழ்வில் அள்ளி வழங்க வாழ்த்துக்கள்.

Advertisements

4 thoughts on “இந்த வருடத்தில் நான்…

 1. 2012 புத்தாண்டுக்கு என் இனிய நல் வாழ்த்துகள், நுண்மதி.

  என்னை தங்கள் புதிய நண்பராகக் கூறியுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

  என் வலைப்பக்கமே வருவதில்லையே,என் மீது ஏதும் கோபமோ? என்று நினைத்தேன்.

  என் 200 ஆவது பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்காவது வருகை தாருங்கள். பிறகு மற்ற பதிவுகளுக்கும் நேரம் கிடைக்கும் போது சென்று எல்லாவற்றிற்கும் எப்படியாவது, பின்னூட்டம் அளித்திடுங்கள்.

  நடுநடுவே தேர்வுக்கான பாடங்களையும் படித்திடுங்கோ! அதுவும் முக்கியம்.
  அன்புடன் vgk

  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.

   \\என் வலைப்பக்கமே வருவதில்லையே,என் மீது ஏதும் கோபமோ? என்று நினைத்தேன்.\\
   தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்ததால், என்னால் எழுதவோ, படி்க்கவோ முடியவில்லை சார். கோவிச்சுக்காதீங்க.

   படித்துவிட்டு, பின்னூட்டம் தருகிறேன் சார்.

   \\நடுநடுவே தேர்வுக்கான பாடங்களையும் படித்திடுங்கோ! அதுவும் முக்கியம்.\\

   இனிமேல் பிப்ரவரியில்தான் எனக்கு தேர்வு சார். அதுவரைக்கும் கொஞ்சம் நேரமிருக்கிறது, படிக்கவும், எழுதவும்.

 2. என் அழைப்பினை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி நுண்மதி …! உங்கள் தேர்வு ஒத்திப்போனதில் எனக்கும் மகிழ்ச்சியே …! நிறைய கவிதைகள் கிடைக்குமே …! அன்புடன் அனந்து …

  • நன்றி அனந்து. என்னுடைய தேர்வு எழுத விடாமல் என்னை ரொம்பவும் படுத்திவிட்டது. இனிமேல் எழுதவும் கொஞ்சம் நேரம் கிடைக்கும். என்ன இருந்தாலும் உங்களைப் போல் அழகாக எழுத எனக்கு இன்னும் அனுபவம் தேவை அனந்து. 🙂

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s