மழலைகள் உலகம் மகத்தானது !

மழலைகள் உலகம் மகத்தானது என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களும் செம்மையாக எழுதிக்கொண்டிருக்க, எதிர்பாராவிதமாக திரு.வை.கோபால கிருஷ்ணன் ஐயா அவர்களிடமிருந்து இந்தத் தொடர்பதிவைத் தொடருமாறு நமக்கும் அழைப்பு வந்தது. இந்த அழைப்பினை அன்புக் கட்டளையாகக் கொண்டு, சில விவரங்களையும் சேகரித்து இதோ எழுதத் தொடங்கியிருக்கிறோம்.

சொல்லு மழலையிலே – கண்ணம்மா !
துன்பங்கள் தீர்த்திடுவாய்;
முல்லைச் சிரிப்பாலே – எனது
மூர்க்கந் தவிர்த்திடுவாய் .
 
என பாரதியாரால் பாடப்பட்ட வரிகள் (கண்ணன் பாட்டு) இவை. ஆம்…! பெண்ணுரிமைப் போராளியாய்த் திகழ்ந்த பாரதியையே கட்டிப்போட்ட மழலையால் விளைந்த வரிகள்தாம் இவை.

தன் மழலை மொழியால் நம் துன்பங்கள் அனைத்தையும் தீர்த்துவிடவும், தன் அழகுச் சிரிப்பால் நமது கோபத்தைத் தவிடு பொடியாக்கவும் முடிகிறதென்றால், அந்த மழலை எவ்வளவு மகத்தானது!


குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகளாலேயே முழுவதுமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கருவறையில் தொடங்கும் இந்த அதிசயம் குழந்தைகள் வளரும்போது நீள்கிறது. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் (Neurons) உருவாகின்றன. இவை உருவாகும் வேகம் என்ன தெரியுமா? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! 

மழலைகள் உலகம் மகத்தானது மட்டுமல்ல வியக்க வைப்பதும் கூட!
மூன்று அல்லது நான்கு வயதுடைய ஒரு குழந்தையின் கேள்விக்கு விஞ்ஞானிகளால் கூட பதிலளிக்க முடியாது. அவ்வளவு நுணுக்கமாக இருக்கும் அவர்களின் கேள்விகள்.

ஒருமுறை நாங்கள் கோவிலுக்குச் சென்றிருந்தோம். என் பக்கத்து வீட்டுக் குழந்தை என்னோடு ஒட்டிக்கொண்டிருந்தாள். கோவிலில் சாமிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. பின்னர், சாமிக்கு உடை அணிவிக்கும் பொருட்டு திரை இடப்பட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தை என்னிடம், ” அக்கா, எதுக்கு சாமிய மூடிட்டாங்க?” எனக் கேட்டது. ” சாமிக்கு ட்ரெஸ் மாத்தறாங்கடா” என்றேன் நான். உடனே, ” சாமி குளிக்கும்போதே மூடலயே. துணி மாத்தும் போது எதுக்கு மூடறாங்க?” எனக் கேட்டது. என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் ஏதோ சொல்லி சமாளித்து வைத்தோம். இப்படியான, கேள்விகளால் சில நேரங்களில் குழந்தைகள் நம்மைத் திணறடிப்பதுண்டு. அவர்களின் அறிவு தான் எத்துணை ஆழமானது.

குறுகிய காலத்திலேயே குழந்தைகள் எவ்வளவு கற்றுக்கொள்கிறார்கள் தெரியுமா?
தவழ்வதற்கு, தத்தித் தத்தி நடப்பதற்கு, ஓடுவதற்கு என பல செயல்களைக் கற்றுக்கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் சிக்கலான, குழப்பமான மொழியைக் கற்பதும், பேசுவதும் அவர்களுக்குப் பெரிய விஷயம்.

 

ஆயிரக்கணக்காண பொருள்களையும், செயல்களையும் தொடர்புபடுத்தி அவைகளை மனதில் பதிய வைத்துக்கொள்ளும் திறமை குழந்தைகளுக்கு உண்டு. இவ்வழியாகவே அவர்கள், மொழியைக் கற்கிறார்கள்.
குழந்தைகளுக்குத் தான் எவ்வளவு பொறுப்புகள்!

இவற்றைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?
மழலையாய் இருக்கும்போது இத்துணையையும் செய்த நாம், ஒரு கேள்வியையும் அதற்கான பதிலையும் படிக்க ஒரு கல்லூரி மாணவன் படும் பிரயத்தனத்தைப் பார்க்கும்போது வியப்பே உண்டாகிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி, ” இழந்த ஒரு விஷயத்தை இறைவனிடம் கேட்பதாக இருந்தால் எதைக் கேட்பீர்கள்” எனக் கேட்டால் யோசிக்காமல் நம்மிடமிருந்து வருகிற பதில் ” என் குழந்தைப் பருவம்” என்பதாகத்தான் இருக்கும்.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல், சாக்குப் போக்கு சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்காமல், தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கும் மழலைப் பருவம் மகத்தானதுதானே…!

Advertisements

11 thoughts on “மழலைகள் உலகம் மகத்தானது !

 1. தாங்கள் என் அழைப்பை அன்புடன் ஏற்று அழகான அருமையான பதிவு வெளியிட்டுள்ளதற்கு என் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  படங்கள் யாவும் அருமையோ அருமை. பாரதியாரின் கண்ணன் பாட்டில் ஆரம்பித்துள்ளது தனிச்சிறப்பு.

  // ” சாமி குளிக்கும்போதே மூடலயே. துணி மாத்தும் போது எதுக்கு மூடறாங்க?” எனக் கேட்டது. என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் ஏதோ சொல்லி சமாளித்து வைத்தோம். இப்படியான, கேள்விகளால் சில நேரங்களில் குழந்தைகள் நம்மைத் திணறடிப்பதுண்டு. அவர்களின் அறிவு தான் எத்துணை ஆழமானது.//

  நல்ல நகைச்சுவை மட்டுமல்ல. சிந்திக்க வைப்பதாகவும், திணற அடிப்பதாகவும் தான் உள்ளது. மிகவும் ரசித்தேன்.

  நன்றி, பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பிரியமுள்ள vgk

  • நன்றி சார். உங்களுடைய அழைப்பு இல்லாவிட்டால், இப்படியொரு பதிவு உருவாகியிருக்காது என நிச்சயமாய் சொல்வேன். ஏனெனில், குழந்தைகளைப் பற்றிய அறிவு எனக்கு மிக மிகக் குறைவே.

 2. அன்புள்ள நுண்மதிக்கு அநேக ஆசிகளும் வாழ்த்துக்களும்.

  //நன்றி சார். உங்களுடைய அழைப்பு இல்லாவிட்டால், இப்படியொரு பதிவு உருவாகியிருக்காது என நிச்சயமாய் சொல்வேன். //

  குழந்தைப்பருவத்தை சமீபத்தில் தாண்டியவரும், திருமணம் இன்னும் செய்து கொள்ளாததால், தாய்மைப்பருவத்தை எட்டாதவருமாகிய தங்களை, நான் இந்தப்பதிவை எழுத அழைத்ததே, உங்கள் பார்வையில், மகத்தானதாகச் சொல்லப்படும் மழலை உலகம், எவ்வாறு இருக்கிறது? என்று உங்கள் எழுத்துக்களில் அறிய வேண்டும் என்ற ஆவலில்தான்.

  //குழந்தைகளைப் பற்றிய அறிவு எனக்கு மிக மிகக் குறைவே.//

  குழந்தையைப் பற்றிய அறிவு குழந்தையாகிய உங்களுக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. அது குழந்தையாகிய உங்களுக்குத்தெரியாமல் இருப்பது இயற்கையே!

  மிகச்சிறப்பாகவே எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி. மிகவும் சந்தோஷம்.
  வாழ்த்துக்கள்.

  பிரியமுள்ள vgk

 3. ” இழந்த ஒரு விஷயத்தை இறைவனிடம் கேட்பதாக இருந்தால் எதைக் கேட்பீர்கள்” எனக் கேட்டால் யோசிக்காமல் நம்மிடமிருந்து வருகிற பதில் ” என் குழந்தைப் பருவம்” என்பதாகத்தான் இருக்கும்/

  மிக இனிமையான அழகான பகிர்வு.. பாராட்டுக்கள்….வாழ்த்துக்கள்…

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s