ரங்கநாதன் தெரு – மீண்டும் உருவாகுமா?

எவ்வளவு தான் பொருள்களின் விலை ஏறினாலும், மக்களின் வாழ்க்கைத்தரமும் கூடவே ஏறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்த இடம் தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவும், உஸ்மான் சாலையும். இரவு பத்து மணி என்றாலும் கூட மக்கள் நடமாட்டம் குறையாமல், மின் விளக்குகளால் மினுக்கிக்கொண்டிருந்த இடங்கள் இவை. தமிழ் சினிமாவின் நகைச்சுவைக்காட்சிகளில் இடம்பெறும் அளவிற்குப் பிரபலமான இடம். அயல்நாட்டுப் பெண்கள் வரை வியந்து பார்த்த நம் சென்னையின் அங்காடித் தெரு.

                      இதோ, இன்று மின் இணைப்பு,தண்ணீர் இணைப்பு என அடிப்படை வசதிகள்  மட்டுமல்லாமல், மக்களுடனான இணைப்பையும் துண்டித்துவிட்டுத் தவித்துக்கொண்டிருக்கின்றன இவ்விடங்கள்.

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) மற்றும் மாநகராட்சிக் குழுவினர் இணைந்து, விதி மீறிக் கட்டிய கட்டிடங்கள் மீதான நடவடிக்கையைத் துவக்கியதாலேயே இந்த நிலைக்கு இவ்விடங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. மொத்தமாக 25 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த தெருவே வெறிச்சோடி காணப்படுகிறது.

மாநகராட்சி விதிகளின்படி கட்டிடங்களுக்கிடையேயான இடைவெளி, வாகனங்கள் நிறுத்துமிடம், முறையான அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் கட்டியது போன்றவற்றில் விதிமீறல்கள் இருந்ததால், 19 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (CMDA) விதிகளை மீறும் வகையில் உள்ளதால் 6 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக சி.எம்.டி.ஏ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், ஷோபா ஸ்டோர்ஸ்,ஸ்ரீ குமரன் தங்க மாளிகை, என்.எஸ். ராமநாதன் நகைக் கடை, உமர்கயாம் உணவகம், ஸ்ரீதேவி தங்க மாளிகை, டெக்ஸ்டைல் இந்தியா, காதிம்ஸ், பாபு ஷூ மார்ட், மீனாட்சி ரியல் எஸ்டேட், சரவணா இனிப்பகம், அர்ச்சனா ஸ்வீட்ஸ், சண்முகா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் (2 கிளைகள்), சாட் வணிக வளாகம், தி சென்னை சில்க்ஸ், கேசர் வேல்யூ அலுவலகம் ஆகிய வளாகங்களுக்கும் மற்றும்  ஜெ.சுந்தரலிங்கம், எஸ்.சீனிவாசன், ராஜரத்தினம், சித்திரபாண்டியன், அழகு, முகமது சித்திக், சீனிவாசலு செட்டி ஆகியோரின் கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

விதி மீறிய கட்டிடங்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படுகிறது என்பதால் இந்தக் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.மேலும், தீ விபத்து போன்ற விபத்துக்கள் ஏற்படும்போது, மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்பதும் அறிந்த ஒன்றே.

இது பற்றி, மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

பாமர மக்கள், ” அய்யோ, கடைய மூடிட்டாங்களே” எனப் புலம்பிக்கொண்டிருக்க, மற்றொரு சாரார், ” நல்ல வேளை மூடிட்டாங்க. போக்குவரத்து நெரிசல் குறைந்தது” எனப் பெருமூச்சு விடுகின்றனர்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ரங்கநாதன் தெருவில் இயங்கிக்கொண்டிருந்த சரவணா ஸ்டோர்ஸில் மட்டும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஆயிரம் பேர் பொருள்கள் வாங்கிக்கொண்டும்,ஆயிரம் பேர் வெளியேறிக்கொண்டும், ஆயிரம் பேராவது கடையினுள் நுழைந்துகொண்டும் இருந்தனர். அப்படியானால், அந்தத் தெருவில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டும். இவ்வாறான நிலையில், தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும், நெரிசலின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்பது நம் கருத்து.

பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்த எண்ணம் இத்தனை நாட்களாக அரசுக்குத் தெரியாமல் போனதா அல்லது இந்த மக்கள் நல அரசு கண்டும் காணாமல் இருந்ததா என்பது அவர்களுக்கே வெளிச்சம். எது எப்படியோ, இப்போதாவது இந்த எண்ணம் உதயமானதே.

இவ்வளவிற்கும் அப்பால், ” நான் இந்த மாசம் சீட்டுக்கட்டி முடிச்சுடுவேன்”, “அப்பாடா, இந்த மாசம் தீபாவளி போனஸ் வரும்”, “எங்க வீட்டுக்கு இப்போதான் மொத மாச சம்பளம் அனுப்பப் போறேன்”,” எங்க அக்கா குழந்தைக்கு இந்த மாசம் நகை வாங்கணும்”, ” எங்க வீட்டு செலவுக்கு இந்த சம்பளமே பத்தல” இப்படியான குரல்கள் ரங்கநாதன் தெருவில் ஒலிக்காமலா இருந்திருக்கும் என எண்ணும்போது தான் கண்கள் குளமாகின்றன.

பொது மக்களுக்கு பாதுகாப்பளிக்க நினைக்கும் இந்த அரசு, இவர்களின் நிலையையும் கொஞ்சம் யோசித்தால் நன்றாகத்தானிருக்கும். கடைகளுக்கு முன்னால் நின்றுகொண்டு, “இன்றோ நாளையோ கடையைத் திறந்துவிடுவார்கள். நமக்குப் பழையபடியே சம்பளம் கிடைக்கும்” என நம்பிக்கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளின் வாழ்வில் இந்த அரசு ஒளியேற்றுமா?

ரங்கநாதன் தெரு, ராஜீவ்காந்தி சாலையிலுள்ள கேளம்பாக்கத்தில் உருவாக்கப்படும் என்பது கூடுதல் செய்தி. இது எந்த அளவிற்கு உண்மை என்பது நிறைவேறிய பின்னரே தெரிய வரும்.

கடவுள் நம்பிக்கையிருந்தால், வணங்கிக் கொள்ளுங்கள், ஊர் விட்டு ஊர் வந்து பிழைப்புத் தேடிய இந்த சகோதர, சகோதரிகளின் எதிர்காலத்திற்காகவும்.

Advertisements

2 thoughts on “ரங்கநாதன் தெரு – மீண்டும் உருவாகுமா?

 1. பயனுள்ள பதிவு. பாவம் அங்கு பணியாற்றி வந்த ஏழைத் தொழிலாளிகளும் அவர்கள் குடும்பங்களும். ந்ல்ல சமூக சிந்தனையுடன் கூடிய பதிவு. அரசாங்கம் தான் அவர்களுக்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

  என் வலைப்பக்கமே இப்போதெல்லாம் வருவதில்லை.
  இந்த வாரம் தமிழ்மண நட்சத்திரப்பதிவராக ஆக்கியுள்ளார்கள்.
  தினமும் நான்கு பதிவுகள் தந்து வருகிறேன். நேரமிருந்தால் வாருங்கள்.
  சனி & ஞாயிறு 2 நாட்களே மீதி உள்ளன. gopu1949.blogspot.com
  Time of Release 11 am, 2 pm, 4 pm & 6 pm அன்புடன் vgk

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s