என்னவாகிறேன் நான்…?!

உன்னைக் காணும் பொழுதில்

உலகையே மறக்கிறேன்

– பசியோடிருக்கும் ஏழை உணவைப் பார்த்து சொன்னது.

 

உன்னைக் காணும் பொழுதில்

உணவையே மறக்கிறேன்

– ஒரு செல்வந்தன் பணத்தைப் பார்த்து சொன்னது.

 

உன்னைக் காணாத பொழுதுகளில்

உணர்விழக்கிறேன்.

– காதலனைப் பார்த்து காதலி சொன்னது.

 

உன்னைக் காணாத பொழுதுகளில்

உலகையே வெறுக்கிறேன்.

-கணவனையிழந்த மனைவி சொன்னது.

 

உன்னைக் காணாத பொழுதுகளுக்காய்

கடவுளிடம் நன்றி சொல்கிறேன்.

– திருநங்கையைப் பெற்றவர்கள் திருநங்கையிடம் சொன்னது.

 

உன்னைக் காணும் பொழுதுகளுக்காய்

தவமிருக்கிறேன்.

– பெற்றோரால் ஒதுக்கப்பட்ட ஒரு திருநங்கை பெற்றோரைப் பார்த்து சொன்னது.

 

உன்னைக் காணும் பொழுதுகளுக்காய்

நொடி நொடியாய் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

– பெற்றோரையிழந்த குழந்தை பெற்றோரையெண்ணி சொன்னது.

 

உன்னைக் காணும் பொழுதில்

எனக்கு இரக்கம் ஏற்படுகிறது.

– உலகைத் துறந்த ஞானி உலகோரைப் பார்த்து சொன்னது.

 

உன்னைக் காணும் பொழுதில்

உவகையடைகிறேன்.

– தாய் தன் பச்சிளம் குழந்தையைப் பார்த்து சொன்னது.

 

உன்னைக் காணும் பொழுதுகளில்

நான் நீயாகிறேன்.

-அன்றாட நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒரு படைப்பாளி சொன்னது.

 

 

 

 

Advertisements

2 thoughts on “என்னவாகிறேன் நான்…?!

 1. அனைத்து வரிகளும் அருமையாக உள்ளன.

  இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது:

  //உன்னைக் காணும் பொழுதுகளில்
  நான் நீயாகிறேன்.
  -அன்றாட நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒரு படைப்பாளி சொன்னது//

  [தன் படைப்பினில் மிகச்சிறந்ததை படிக்கும் படைப்பாளி சொன்னது என்று கூட இருக்கலாமோ என எனக்குத் தோன்றியது.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்…

  • நன்றி சார். ஒரு படைப்பாளி தான் காணும் நிகழ்வாகவே மாறும்போது தான் நல்ல படைப்புகள் உருவாகின்றன என்பது அடியவளின் கருத்து. எனவேதான் அவ்வாறு எழுதினேன் சார்.

   மாற்றம் தேவையென்றால் சொல்லுங்கள். மாற்றி விடுகிறேன்.

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s