ஒரு காதல் உரையாடல்

காதலி:
எனக்கொரு சந்தேகம்…
என்னை எவ்வளவு பிடிக்கும் உங்களுக்கு?

காதலன்:
வானத்து விண்மீன்களை
நேரம் கிடைக்கும்போது
எண்ணிப்பார்… தெரியும்…!

காதலி:
சூரியன் ஏன் சுடுகிறான்…?

காதலன்:
நீ வானத்திலன்றி
பூமியில் பிறந்துவிட்டாயே…!

காதலி:
அப்படியானால், நிலவு ஏன் தண்ணென்றிருக்கிறது…?

காதலன்:
நான் உன்னருகிருக்கும் இரவில்
நீயும் அப்படித்தானே…!

காதலி:
கடல் ஏன் சத்தமிடுகிறது..?

காதலன்:
நாம் சங்கமிக்கும்போது
நீ சிணுங்குவதில்லையா என்ன…!

காதலி:
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்
விரல்களில் ஒட்டுவது ஏன்…?

காதலன்:
நீ என்னை முத்தமிடும் போது
உன் இதழ் அமிர்தம் ஒட்டுமே…!

காதலி:
போகட்டும்…
உங்களை வியக்க வைத்தது எது…?

காதலன்:
நீ உடுத்தும் உடைகளும்
உன் கூந்தலின் ஒற்றை ரோஜாவும்…
உயிரற்றவை கர்வப்பட்டு நான் கண்ட முதல் தருணமது…!

காதலி:
நான் முதன் முதலாக உங்களிடம் பேசியபோது என்ன நினைத்தீர்கள்…?

காதலன்:
என் மொழியே முன்னின்று பேசுவதாய் உணர்ந்தேன்…!

காதலி:
காதலுக்கும் காமத்துக்கும் என்ன வித்தியாசம்…?

காதலன்:
காதல் என்பது பழச்சாறு…
காமம் என்பது சர்க்கரை…
பழச்சாறை விடவும் சர்க்கரை மிகாதவரை நன்று..

காதலி:
உலகிலேயே மிகச்சிறந்தது எது…?

காதலன்:
நீ எனக்கு தருகின்ற முத்தங்களின் ஈரம்
நிலைக்கின்ற நொடிகள்…!
காதலி:

தவம் எது? வரம் எது?

எனக்கு நேரமாகி விட்டது… சீக்கிரம்…!

காதலன்:
எனக்கு தவம் செய்யும் நேரம் நெருங்கி விட்டது போலும்…!

காதலி:
புரியவில்லையே…!

காதலன்:
உன்னை நான் பிரிந்திருக்கும் நேரம் தவம்…
நம் சந்திப்புகள்தான் வரம்…!

Advertisements

4 thoughts on “ஒரு காதல் உரையாடல்

 1. //காதலி:
  தவம் எது? வரம் எது?
  எனக்கு நேரமாகி விட்டது… சீக்கிரம்…!//

  காதலன்:
  எனக்கு தவம் செய்யும் நேரம் நெருங்கி விட்டது போலும்…!

  காதலி:
  புரியவில்லையே…!

  காதலன்:
  உன்னை நான் பிரிந்திருக்கும் நேரம் தவம்…
  நம் சந்திப்புகள்தான் வரம்…!//

  சூப்பர் ! பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

எண்ண ஓட்டங்களைப் பின்னூட்டமாக இடுவதற்கு இங்கே :

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s