சிற்பியின் கைகளில்
அகப்படாத கல்லாய்
நாங்கள்……
செதுக்கப்படுகிற கற்களெல்லாம்
விசனப்படுகிறபோது,
நாங்கள் மட்டும் ஏக்கத்தில்…
சிற்பமாய் மிளிர்கிற
கற்களைக் காணும்போது
கலங்குகின்றன கண்கள்….
நாங்களும் மிளிர்ந்திருப்போமோ
எங்களுக்கும் பெற்றோர்
இருந்திருந்தால்…….?!
எங்கிருக்கிறாய் அம்மா….?????
தலைவாழை இலையாய்
கவுரவித்திருக்காவிட்டாலும்
எச்சில் இலையாய்
எறியாதிருந்திருக்கலாமே….
எங்களுக்கும் கிடைத்திருக்கும்
அன்பெனும் விருந்து……..!!!!!

தலைவாழை இலையாய்
கவுரவித்திருக்காவிட்டாலும்
எச்சில் இலையாய்
எறியாதிருந்திருக்கலாமே….
மனதைச் சுண்டிய வரிகள்.
தங்கள் வருகைக்கு நன்றி சார். எதிர்பாராத வருகை. மிகவும் மகிழ்வாக இருக்கிறது சார். நேரம் கிடைக்கும்போது மீண்டும் வாருங்கள்.
//தலைவாழை இலையாய்
கவுரவித்திருக்காவிட்டாலும்
எச்சில் இலையாய்
எறியாதிருந்திருக்கலாமே….
எங்களுக்கும் கிடைத்திருக்கும்
அன்பெனும் விருந்து……..!!!!!//
ஆஹா! எவ்வளவு மிகச்சிறந்த வார்த்தைகளைக் கையாண்டுள்ளீர்கள்.
உங்களின் இந்தக்கவிதை என்க்கு ரொம்பவும் பிடித்துள்ளது.
அந்த குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைக்கு ஆதரவாய் உங்கள் எழுத்துக்கள் உள்ளன.
தங்களின் நல்ல குணமும் இரக்ககுணமும் நன்கு பளிச்செனத் தெரிகிறது. வாழ்க! வாழ்க! மனமார்ந்த பாராட்டுக்கள்.
\\ உங்களின் இந்தக்கவிதை எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது//
கொடுத்து வைத்த கவிதை சார். உங்களை மாதிரி உயர்ந்தவர்களுக்குப் பிடிக்க கொடுத்துவைத்திருக்க வேண்டுமே.
\\அந்த குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைக்கு ஆதரவாய் உங்கள் எழுத்துக்கள் உள்ளன.//
இப்போதைக்கு இப்படி மட்டுமே உதவும் நிலையிலிருக்கிறேன் சார்.
\\தங்களின் நல்ல குணமும் இரக்ககுணமும் நன்கு பளிச்செனத் தெரிகிறது. வாழ்க! வாழ்க! மனமார்ந்த பாராட்டுக்கள்.//
எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதம்தான்
சார்…
\\
தலைவாழை இலையாய்
கவுரவித்திருக்காவிட்டாலும்
எச்சில் இலையாய்
எறியாதிருந்திருக்கலாமே….
எங்களுக்கும் கிடைத்திருக்கும்
அன்பெனும் விருந்து……..!!!!!
விருந்தாய் அமையும் கவிதை !
நன்றி தோழி… தங்களின் பின்னூட்டமே கவிதை விருந்து போல்…